வரலாறு... தான் பேசாமல், தன்னைப் பற்றி உலகையே பேச வைத்தவர்.... யார் இவர்? - Seithipunal
Seithipunal


ஹெலன் கெல்லர்:

ஒன்றரை வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பார்வைத்திறன், பேசும்திறன், கேட்கும்திறனை இழந்தாலும், சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார்.

இவர் ஆனி சலிவன் என்ற ஆசிரியை உதவியுடன் பத்து வயதுக்குள் பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார். தனது கல்லூரி நாட்களிலேயே 1903ஆம் ஆண்டு தி ஸ்டோரி ஆஃப் மை லைப் என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார்.

மேலும் இவருடைய சுயசரிதை தமிழ் உட்பட உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டது. இதை தவிர, 12 நூல்கள் எழுதியுள்ளார்.

பார்வையின்றி, காதுகேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி மிராக்கிள் ஒர்க்கர் (வுhந ஆசையஉடந றுழசமநச) திரைப்படம் ஆஸ்கார் விருதை பெற்றது.

வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அயராமல் பாடுபட்ட ஹெலன் கெல்லர் 1968ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

helen keller birthday 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->