மீண்டும் கஞ்சா குடிப்பதை ஊக்குவிக்க, ஜாலியான ஒரு பாட்டை போட்டு கொடுத்த யுவன்! வைரல் சாங் வைத்த ஆப்பு! - Seithipunal
Seithipunal


லவ் டுடே திரைப்படத்தின் 'பச்சை இலை' (கஞ்சா) பாடல் சர்ச்சையான நிலையில், தனது ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் யுவன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

'கோமாளி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.  

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் இசை அமைக்க, அண்மையில் 'பச்ச இலை' (கஞ்சா) என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

ஏற்கனவே யுவனின் 'கஞ்சா பூ கண்ணால' பாடல் சர்ச்சையாகிய நிலையில், கஞ்சா குடிப்பதை ஊக்குவிக்கும் விதமாக பச்சை இலை பாடல் வரிகளில் போதைப்பொருள் பற்றி குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. 

இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் யுவன் விடுத்துள்ள விளக்கத்தில், ''கஞ்சா குடிக்கறது பற்றி ஜாலியாக உருவாக்கப்பட்ட பாடல் தான் அது. ஆனால் நீங்கள் நிஜ வாழ்க்கையில் கஞ்சா போன்ற போதைப் பொருள் பயன்படுத்திடாதீங்க. இது என் கோரிக்கை" என்று யுவன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yuvan say about lave todat pachai ilai song


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->