சோறு, தண்ணி இல்லாமல் முக்கிய இயக்குனர் வீட்டில் யோகிபாபு.! பல வருடத்திற்கு வெளியான சோக சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் யோகிபாபு. ஆரம்பத்தில் தனது தோற்றத்தை பலரும் கேலி செய்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார். 

ஆனால், தற்போது அதையே தனது ப்ளஸ்சாக மாற்றி திரைத்துறையில் ஜெயித்து இருக்கிறார். பலருக்கு அவர் இன்ஸ்பிரேஷனல் மாடலாகவும் இருக்கிறார். 

நடிகர் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியதை தொடர்ந்து அவரது நகைச்சுவைக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது உடல் தோற்றமும் வார்த்தை உச்சரிப்புகளும் சிறப்பாக அமைந்தது. அவர் காமெடியனாக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் நடித்து தற்போது திரையில் நல்ல நிலையில் இருக்கிறார். 

அவர் ஹீரோவாக நடித்திருந்தாலும் கூட முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஏற்க தயங்குவதில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அவருக்கு திருமணம், புதிய வீடு என்று சொந்த வாழ்க்கையிலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது. சமீபத்தில்தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

இந்த நிலையில் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் யோகிபாபு பேசிய போது, "12 வருடங்களுக்கு முன்பு பட வாய்ப்பு கேட்டு இயக்குனர் பாக்யராஜ் வீட்டு முன்பு சோறு தண்ணி இல்லாமல் படுத்து கிடந்தேன். அதன்பிறகு அவர் அழைத்து என்னை சித்து ப்ளஸ் டூ திரைப்படத்தில் நடிக்க வைத்தார். இந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது சாந்தனுவுக்கு கூட தெரியாது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

சோறு, தண்ணி இல்லாமல் முக்கிய இயக்குனர் Yogibabu Speech in murungaikai Chips Promotion Program


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal