அஜித்தின் 64-வது படத்தை இயக்க போவது இவரா? மாஸ் அப்டேட் ..! 
                                    
                                    
                                   Who will direct Ajith 64th film
 
                                 
                               
                                
                                      
                                            நடிகர் அஜித்,  'விடாமுயற்சி' படத்தை தொடர்ந்து  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63-வது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து முடித்துள்ளார். 
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு  ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படமான 64-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்விக்கு பத்தி கிடைத்துள்ளது.  இந்த படத்தினை சிவா அல்லது விஷ்ணு வர்தன் இவர்கள் இருவரில் யாராவது இயக்குவார்கள் என கூறப்பட்டு வந்தது. 
ஆனால், கார்த்திக் சுப்பராஜ் தான் அஜித்தின் 64-வது படத்தை இயக்கவுள்ளார் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Who will direct Ajith 64th film