கமலின் விக்ரம் படத்தில் நடிக்க இருந்த விக்ரம்.. இந்த கேரக்டரா.? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்றது. நெகட்டிவ் விமர்சனங்களே, எழாத வகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது. 

விக்ரம் திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி இதுவரை 430 கோடிகளை வசூல் செய்துள்ளது. விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூர்யா அட்டகாசமாக 10 நிமிட காட்சியில் கலக்கி இருப்பார். இந்த நிலையில், இந்த கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பற்றிய தகவல் வெளியாகி ஆச்சர்யப் படுத்தியுள்ளது. 

இதில், முதலில் நடிக்க இருந்தது விக்ரம் தானாம். ஆனால், இது வெறும் சின்ன கதாப்பாத்திரம் என்று இந்த வாய்ப்பை அவர் கழட்டி விட்டுள்ளாராம். கால்ஷீட் பிரச்சனையும் இருந்ததால் அவர் நடிக்க மறுத்த பின் தான் இந்த வாய்ப்பு சூர்யாவை தேடி போனதாம். இந்த கதாப்பாத்திரத்தின் தன்மை அறிந்து சூர்யா தட்டி தூக்கி விட்டாராம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram In Vikram Movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->