சூரியின் விடுதலை படத்தின் ஆடியோ லான்ச் தேதி வெளியீடு.!  - Seithipunal
Seithipunal


பெயருக்கு ஏற்றதைப் போல எடுத்த அனைத்து படங்களிலும் வெற்றி பெற்றவர்தான் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது, இவர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகின்றார். ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் விஜய் சேதுபதியை தொடர்ந்து, இதில் மூத்த இயக்குனரான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படமானது லிமிட்டை தாண்டி எடுக்கப்பட்டு இருப்பதால் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

எனவே, முதல் பாகத்திற்கான வேலைகளை படக்குழு விறுவிறுப்பாக முடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தில் கூடுதலாக கௌதம் மேனனும் நடித்து இருக்கிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்யும் தகவலாக இருக்கின்றது.  

இத்தகைய நிலையில், இந்த திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வருகின்ற மார்ச் 8-ம் தேதி நடக்கவுள்ளது. இந்த திரைப்படத்தை ரெட்ஜன்ட் மூவிஸ் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viduthalai audio launch date 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->