வெற்றிமாறனின் விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். தற்போது, இவர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதியை தொடர்ந்து, இதில் மூத்த இயக்குனரான ராஜீவ் மேனன் மற்றும் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். மேலும், இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்ட்டு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே, முதல் பாகத்திற்கான வேலைகளை படக்குழு முடித்துள்ளது.

இதனிடையே இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 8-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் விடுதலை பாகம் 1 திரைப்படம் மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetrimaran in viduthalai movie release on March 31


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->