அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகினர்.! 770க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் காலமானார்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் கைகாலா சத்தியநாராயணா (87) காலமானார். நவரச நடன சர்வபௌமா என்று அன்புடன் அழைக்கப்படும் கைகாலா 1935 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் கவுதாரம் என்ற கிராமத்தில் பிறந்தார். 

770க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், 200-க்கும் மேற்பட்ட இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். மேலும், தமிழில் கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் திரைப்படத்தில், நடிகர் ஸ்ரீமனின் மாமனார் ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் இவர் தயாரிப்பாளராக, ராமா பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் கொடம சிம்மம், முத்துமாலை மொகுடு, பங்காரு குடும்பம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை அவர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கைகாலா சத்தியநாராயணா இன்று அதிகாலை 4 மணியளவில் பிலிம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரது மறைவு தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veteran Telugu star Kaikala Satyanarayana passes away


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->