தெலுங்கில் திட்டமிட்டபடி "வாரிசு" படம் ரிலீஸ் - தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ள இந்தப்படம்  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 

இதையடுத்து நடிகர் விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளதனால் வாரிசு படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். 

இதன் காரணமாக தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையின் போது நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த தீர்மானத்தால் விஜயின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இதற்கு தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், விஜயின் வாரிசு எந்த ஒரு சிக்கலுமின்றி தெலுங்கில் திட்டமிட்டபடி அனைத்து இடங்களிலும் திரையிடப்படும் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர் தெரிவித்ததாவது, "வாரிசு திரைப்பட வெளியிடுவது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி உள்ளோம். அவர்கள் இது தொடர்பாக நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varisu movie confirm released in telungu theaters


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->