வலிமை - பொங்கல்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தல அஜித். இவர் இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

படத்தின் டைட்டில் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில், இந்த படத்தின் அப்டேட்டிற்காக அஜீத் ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தரமான விருந்தாக வரும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

மேலும், படத்தில் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகியது. இதனால், தலை, கால் புரியாமல் தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் (Lyric Video), வலிமை படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகியது.

இந்நிலையில், வலிமை படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று படக் குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

valimai at pongal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->