அசத்தல் தகவல்.. வடிவேலு ரசிகர்களுக்கு பீறிட்ட உற்சாகம்.! வித்யாசமான முயற்சியில் வடிவேலு.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் தான் வடிவேலு. ஒரு காலத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு நிறைய திரைப்படங்களில் வடிவேலு நடித்து இருப்பார். 

இவரது யதார்த்தமான நகைச்சுவை பேச்சு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. ஆனால், அவரது அந்தரங்க பிரச்சனைகள் காரணமாக சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியது. இருந்தாலும் கூட அவரது பழைய நகைச்சுவை காட்சிகள் இன்றுவரை அனைவராலும் போற்றப்பட்டு வருகின்றது. 

அவரது நகைச்சுவைகள் பல ஆண்டுகளாகியும் உயிர்ப்புடன் இருக்கிறது. நிறைய வருடங்களுக்கு பிறகு தனது பிழைக்கு மன்னிப்பு கேட்ட வடிவேலு ஒரு கலைஞன் வாய்ப்பு கிடைக்காமல் சும்மா இருப்பது மிகவும் கொடுமையான விஷயம் என்று அவர் தெரிவித்தார். 

இதை பார்த்து இறங்கி வந்த திரையுலகம் அவருக்கு வாய்ப்பளிக்க முன் வந்துள்ளது. தற்போது, அவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vadivelu in web series


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->