விஜய் ஒரு பச்சோந்தி, நேர்மை இல்லாதவன்.. அவனை பற்றி எனக்கு தெரியும்.. நடிகர் விஜய்யை மிக மோசமாக விளாசிய பிரபலம்..!  - Seithipunal
Seithipunal


நேற்றைய முன்னாள், விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றே போட்டிருந்தார். அதில் "போய் வேற வேலை இருந்தா பாருங்கடா" என்று பதிவிட்டு இருந்தார்.  தற்போது இதுதான் இரண்டு நாட்களாக அனைவராலும் பேசப்பட்ட வருகின்றது. இதனால் விஜய் சேதுபதி, விஜய்க்கு வக்காலத்து வாங்குகிறார், விஜயுடன் சேர்ந்து கிறிஸ்தவ கைக்கூலியாக மாறிவிட்டார் என்று பலர் மோசமாக பேசி வருகின்றனர்.  

இதற்கெல்லாம் காரணம் விஜய் மேல் நடத்தப்பட்ட IT ரைட் தான். AGS நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம், தியேட்டர் உட்பட இருபதுக்கும் மேலான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பின்னர் நெய்வேலிக்கு சென்று விஜய்யை அழைத்துக்கொண்டு இதுகுறித்து விசாரணை நடத்தினர். மேலும் ஜேப்பியார், ஜேப்பியாரின் மகள் ரெஜினா, விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி, விஜய் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது.

இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான, வலதுசாரி சிந்தனையாளருமான உமா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் சேதுபதியும் மதம் மாற்றும் வேலையை விட்டுட்டு வேற வேலை இருந்தால் பாருங்கள். பிறகு மற்றவர்களை பற்றி பேசலாம் என்று கூறியிருந்தார். மேலும் விஜய் ஒரு பச்சோந்தி என்றும் நேர்மை இல்லாதவர் என்றும் நிமிஷத்துக்கு நிமிஷம் ஒரு காட்சி தாவுபவன் என்றும் ரைடின் போது டோப்பாவையும், முகமூடியை மாட்டிக்கொண்டு வண்டியில் ஏறினார்.

மேலும், படத்தில் மட்டும் நல்ல வாய்கிழிய பேசிவிட்டு பிறகு மன்னிப்பு கேட்பது எல்லாம் விஜய்க்கு இது ஒன்றும் புதியதல்ல என்று தெரிவித்தார். முன்னதாக ஜெயலலிதா இருந்த பொழுது இப்படிதான் பேசிவிட்டு பிறகு அப்பாவும், மகனும் கொடநாடு சென்று மன்னிப்புக் கேட்பதற்காக அவரது வாசலில் நின்றவர்கள். இவர் எப்படிப்பட்டவர் என்று எனக்கு தெரியும் என்று கண்மூடித்தனமாக விஜயை விளாசித் தள்ளினார். இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் வழக்கம் போல  பதிலுக்கு விலாசி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

uma ananth scold actor vijay


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->