வெளியானது 'தக் லைப்' படத்தின் முதல் பாடல்.!!
thug life movie first song released
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்கி வெளியாக இருக்கும் 'தக் லைப்' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சுமார் 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உள்ளிட்டவை இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
இதற்கிடையே இந்தப் படத்தின் பஸ்ட் லுக், ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் 'தக் லைப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியாகி இருக்கிறது. இப்பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுதி இருக்கிறார்.
English Summary
thug life movie first song released