விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் பெயர் இன்று வெளியிடப்படவுள்ளது. - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக பலர் அவதாரம்; எடுத்துள்ளனர். அந்தவகையில் நான் படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பேருக்கு கொடுத்தது.

விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் போன்ற படங்கள் மக்களிடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் பெரிதாகி சோபிக்க வில்லை. 

இதனிடையே விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தின் பெயர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

https://x.com/vijayantony/status/1884234920714969485?mx=2


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The name of Vijay Antony's 25th film will be announced today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->