பணம் மட்டும் வாழ்க்கையா?! இசைஞானி இளையராஜாவின் ஒரு பக்கத்தை எடுத்துக்காட்டிய இயக்குனர்! - Seithipunal
Seithipunal


"சொல்ல மறந்த கதை” திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனது குறித்து இயக்குனர் தங்கர் பச்சான் தனது டிவிட்டர் பக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் சொந்த வரிகள் குறித்து மனம் திறந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இளையராஜா அவர்களுடன் நான் இணைந்து பணியாற்றிய அனைத்து திரைப்படங்களிலும் பாடல்களை அவரே தான் இயற்றினார். எனது விருப்பத்திற்காக மட்டுமே அவர் அதனை ஏற்றுக்கொண்டார். அவற்றுள் மூன்று பாடல்களை மட்டும் அவர் விருப்பத்திற்கிணங்க பிற கவிஞர்கள் எழுதினார்கள். 

சொல்ல மறந்த கதையில் அனைத்து பாடல்களும் அவர் இயற்றியது தான். அவருடைய இசையை மட்டுமே சுவைப்பவர்கள் பாடல் வரிகளையும் சுவைத்துப்பாருங்கள். அவர் மிகச் சிறந்த பாடல் ஆசிரியர்.

சிவத்தாணு மாமனாரால் அடித்து விரட்டப்பட்டு போக்கிடம் தெரியாமல் அலையும் பொழுது ஆறுதல் அளிக்கும் விதமாக அமைக்கப்பட்ட அவரே பாடிய 'பணம் மட்டும் வாழ்க்கையா' பாடலில் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. 

"உலகம் ரொம்ப விரிஞ்சிருக்கு உனக்கு இடம் இல்லையா? 
உன் இடத்த எவன் பிடிப்பான் உறுதி உனக்கு இல்லையா? 
ஏர்முனையால் காயம் பட்டா எந்த நிலம் அழகுது? 
உழுவதெல்லாம் விளைச்சலுக்கு உனக்கு நல்ல படிப்பிது. 
உழவுதான் நடந்தது விளைச்சல்தான் இருக்குது" என்று இயக்குனர் தங்கர் பச்சான் சிலாகித்து பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ThankarBachan SollaMaranthaKathai Ilaiyaraja


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->