நடிகர் தளபதி 67 படத்தில் வில்லனாகும் ஆக்‌ஷன் கிங்.. விஜய் சமாளிப்பாரா.?  - Seithipunal
Seithipunal


தளபதி 67-ல் ஹீரோயின் இவரா.? சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.! 

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது. இதில் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பார். 

 இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார். தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இதற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். தொடர்ந்து விஜய்யின் 67வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் இணைய உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே இந்த படத்தில் 6 வில்லன்கள் இருக்கும் நிலையில், அர்ஜுனும் இணைய இருப்பது விறுவிறுப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy67 movie action king Arjun act in negative role


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->