ஆட்டம் போட வைத்தவர்களை ஆட்டங்கான வைக்கிறதா கோலிவுட்? விலகுமா சோகம் !! - Seithipunal
Seithipunal


ஒரு திரைப்படம் வெற்றி பெற கதை எவ்வளவு முக்கியமோ அதேபோல்  பாடல்களுக்கு அமைக்கப்படும் நடனமும் மிக முக்கியம். நண்பர் ஒருவரிடம்  ஏதோ ஒரு பாடலை குறிப்பிட்டு... அந்த பாடலை எழுதியது யார் இசையமைத்தது யார் என்று கேட்டால் அது பழைய பாடல் என்றாலும் சற்று யோசித்து சொல்லி விடுவார்கள். ஆனால் அந்த பாடலின் டான்ஸ் மாஸ்டர் யார் என்ன என்று கேட்டால் மௌனம் ஒன்றே பதிலாக வரும். 

ஒரு பாடலை விஷுவல் ஆக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்  நடனம் பெரும் பங்கு வகிக்கிறது.டான்ஸ்  மாஸ்டர்ஸ்  தங்களின் தத்ரூபமான கம்போசிங்  மூலம் பாடல் முடிவதற்குள்  அழகான குட்டி ஸ்டோரியை ரசிகர்களுக்கு சொல்லி விடுவார்கள். பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் வந்த வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் வரும் கண்ணும் கண்ணும் கலந்து என்ற பாடலுக்கு பத்மினியும் வைஜயந்தி மாலாவும்  ஆடிய நடனம் இன்றுவரை கால்களை ஆட்டம் போடவைக்கிறது. இந்த படத்திற்கு நடன இயக்குனர் ஹீராலால் என்று எத்தனைபேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

அதே போல் நலந்தானா நலந்தானா என்ற பாடலுக்கு பி .எஸ்.கோபாலகிருணன் சிவாஜியின் நாதஸ்வர இசைக்கு ஏற்றார் போல் நாட்டிய பேரொளி பதமினியை  பாரத நாட்டியம் ஆடவைத்திருப்பார். இன்று வரை நடன போட்டிகளில் இந்த பாடல் இடம் பெற தவறுவதில்லை.  
 உத்தம புத்திரன் படத்தில் யாரடி நீ மோகினி என்ற பாடலுக்கு சிவாஜியை நடன இயக்குனர் ஹெலன் பாடலுக்கு ஏற்றவாறு ஆடவைத்திருப்பார். குடியிருந்த கோவில் படத்தில் வரும் ஆடலுடன் பாடலை கேட்டு என்ற பாடலில்  பி .எஸ்.கோபாலகிருஷ்ணன் எம்ஜியாரின் நடனத்தின் மூலம் ரசிகர்களை தியேட்டரில் ஆட்டம் போட வைத்திருப்பர். 

80 களில் கமல் ரஜினி காலத்தில் நடனம் சற்று மெருகேறி பிரபலமடைந்தது. ஒரு நடன இயக்குனராக இருந்து பிறகு ஹீரோவாக கமல் உயர்ந்தவர் என்பதால் அவருடைய படங்களில் நடனங்கள் நேர்த்தியாக இருக்கும். சலங்கையொலி  படத்தில் வரும் தகிட தகிட தந்தானா.... தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் வருது வருது விலகு, விலகு.. ரஜினிக்கு நடனம் சரியாக வராது என்றாலும் அவரையும் மாப்பிள்ளை படத்தில் உன்னைத்தான் நித்தம் நித்தம் , பணக்காரன் படத்தில் டிங் டங் டங் டிங் டாங், மன்னன்  படத்தில் ராஜாதிராஜா உன் தந்திரங்கள் போன்ற பாடலுக்கு அழகாக டான்ஸ் மாஸ்டர் ஆடவைத்திருப்பார் நடன இயக்குனர். 

விஜயகாந்தை பரதன் படத்தில் புன்னகையில்  மின்சாரம் பாடலில் பிரபுதேவா அவருக்குள் இருந்த நடன  திறமையை வெளிக்கொணர்ந்து இருப்பார்.  ரஜினி கமலுக்கு பிறகு விஜய், அஜித் காலத்தில் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதிலும் தளபதி விஜய் இன்றைக்கு புகழின் உச்சியில் இருப்பதற்கு காரணம். அவரின் ஸ்டைலான நடனம்தான். தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் வரை தங்கள் படங்களில் நடனம் சிறப்பாக வரவேண்டும் என்பதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். 

இப்படி ஹீரோக்களையும், ஹீரோயின்களும் கிரியேட்டிவான கோரியோ  கிராபால் ரசிகர்கள் கொண்டாட செய்யும் நடன இயக்குனர்களை தமிழ் திரையுலகம் தொடர்ந்த இருட்டடிப்பு செய்து வந்துள்ளது. பிரபு தேவா, ராஜீசுந்தரம், லாரன்ஸ்  வருகைக்கு பின்பே இந்த நிலை சற்று மாற்றியுள்ளது.

ஏழ்மைநிலையில் இருக்கும்  நடன இயக்குனர்கள்மற்றும் குரூப் டான்சர்களுக்கு வாரியம் வைத்து நல உதவிகள் செய்ய அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று நடன கலைஞர்கள்  கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.  இனியாவது  இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் பெயர்களுடன்  நடன இயக்குனரின் பெயரையும்  தவறாமல் பாடல்களை ஒளிபரப்பும் பொது குறிப்பிடவேண்டுஎன்று ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Cinema Dance Masters life story


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->