நடிகர் சுருளிராஜனின் ஒரே வருட சாதனை.! இன்றளவும் முறியடிக்க முடியாத வரலாறு.!  - Seithipunal
Seithipunal


சினிமாவில் பழங்காலத்தில் நகைச்சுவைக்காக நாகேஷ், டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, மதுரம், தங்கவேலு மற்றும் மனோரமா ஆகிய ஏராளமான கலைஞர்கள் இருந்தனர். 

இவர்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கினாலும் கூட இவர்களின் வெற்றியை தாண்ட முடியவில்லை. தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல காமெடி நடிகர்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சுருளிராஜன். எம்ஜிஆரின் எங்கள் வீட்டு பிள்ளை படத்தின் மூலமாக சினிமாவில் சுருளிராஜன் கால்பதித்தார். 

பின்னர் பல நடிகர்களுடன் தமிழ் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவரது தனித்துவமான குரல் அவருக்கு ப்ளஸ் ஆக அமைந்தது. அது மட்டுமின்றி அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தாற்போல தன்னை தயார்படுத்தி நடிப்பில் வீரியத்தை காட்டுவார். 

இவர் மீண்டும் கோகிலா என்ற படத்தில் காமெடி கலந்த இயக்குனராக நடித்தார். இந்த படம் கமலஹாசன் படமாகும். ஒரு தலைமுறை காமெடி நடிகர்கள் சென்ற பின்னும் கூட கவுண்டமணி, வடிவேலு, செந்தில், விவேக் தலைமுறையிலும் அவர்களுக்கு போட்டியாக சுருளிராஜன் இருந்தார். 

மேலும், ஒரு வருடத்தில் 50 படங்களில் அவரை தவிர எந்த நடிகரும் நடிக்க வில்லை. அது சுருளிராஜனின் ஆட்சி காலம் என்பதால் அந்த காலத்தில் அவரால் ஒரு வருடத்தில் 50 படங்களில் நடிக்க முடிந்தது. இன்று வரை இந்த சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

surulirajan 50 movie at one year


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->