ஓராண்டை நிறைவு செய்த மாநாடு.! தயாரிப்பாளர் பெருமித அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் தான் மாநாடு. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருப்பார். கடந்த வருடம் நவம்பர் 25ல் வெளியாகிய மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்போது வரை மாநாடு படத்தை பலராலும் மறக்க முடியாத நிலையில் தான் படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு சுரேஷ் காமாட்சி தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சின்னதா ஒன்றை ஆரம்பித்தால்‌ தைரியம்‌ கொஞ்சம்‌ கூடவே இருக்கும்‌. ஆனால், கொஞ்சம்‌ அகலமாகக்‌ கால்‌ பதிக்கும்போது மிகப்‌ பதட்டமும்‌,தைரியக்குறைச்சலும்‌ தானாகவே வந்துவிடும்‌. ‘மாநாடு’ படத்தைத்‌ தொடங்கியபோது அந்த இரண்டையும்‌ கடந்து அடுத்த கட்டம்‌ அடைந்தேன்‌.


 
அதற்குப்‌ பெருந்துணையாக இருந்தது சிம்பு, இயக்குநர்‌ வெங்கட்‌ பிரபு ,எஸ்.ஜே சூர்யா, லிட்டில்‌ மேஸ்ட்ரோ யுவன்‌, கல்யாணி பிரியதர்ஷன்‌ மற்றும்‌ நடித்த அனைத்து நடிகர்‌ நடிகைகள்‌, ஃபைனான்சியர்கள்‌ உத்தம்‌ சந்த்‌ அவர்கள்‌ மற்றும்‌ திருப்பூர்‌ சுப்ரமணியன்‌ அண்ணா, ஒளிப்பதிவாளர்‌ ரிச்சர்ட்‌ எம்‌ நாதன்‌, எடிட்டர்‌ கே.எல்‌.பிரவீண்‌, கலை இயக்குநர்‌ உமேஷ்‌, சண்டைப்‌ பயிற்சி ஸ்டண்ட்‌ சில்வா, உதவி இயக்குநர்கள்‌, சிலம்பரசனின்‌ ரசிகர்கள்‌, தொழில்‌ நுட்பக்கலைஞர்கள்‌, ஊடக மற்றும்‌ பத்திரிகை நண்பர்கள்‌, சக தயாரிப்பாளர்கள்‌, விநியோகஸ்தர்கள்‌, திரையரங்க அதிபர்கள்‌, அலுவலக ஊழியர்கள்‌, பி ஆர்‌ ஓ என மாநாடு படத்திற்காக உழைத்த அத்தனை பேரும்தான்‌.
 
இந்த ஒரு ஆண்டு நிறைவு நாளில்‌ அனைவருக்கும்‌ நிறைந்த மனதுடன்‌ நன்றி கூறிக்கொள்கிறேன்‌. என்‌ எல்லா பயணத்திலும்‌ நீங்கள்‌ உடனிருக்கும்‌ நம்பிக்கையில்‌ உழைக்கிறேன்‌. மீண்டும்‌ மீண்டும்‌ நல்ல படங்களைத்‌ தர விளைகிறேன்‌."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

suresh kamatchi about manadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->