மீண்டும் இணையும் சூரரைப்போற்று வெற்றி கூட்டணி.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தில் அவர் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார்.இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் வசூலில் சாதனை படைத்தது. 

இதனையடுத்து தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற  திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா 13 கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீஸர் வீடியோ டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வேறொரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

அந்த வகையில் சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கார இயக்கத்தில் நடிகர் சூர்யா மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் சூர்யா ரசிகர்களுடைய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudha kongara Direct again Surya


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->