அட்லீயை விரட்டும் கதை திருட்டு கேஸ்.! இந்த முறை தெலுங்கு இயக்குனராம்.! - Seithipunal
Seithipunal


பொதுவாகவே விஜய் படங்கள் வந்தாலே சர்ச்சைகள் வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் வெளிவந்த, விஜய் - அட்லி கூட்டணியில் உருவான படம் பிகில்.

இந்த படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குனர் செல்வா என்பவர் ஏற்கனவே, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருந்தார். இதை தொடர்ந்து அந்த சர்ச்சை ஓய்வு பெறுவதற்குள், தெலுங்கு இயக்குனர்  நந்தி சின்னி குமார் என்பவர், இயக்குனர் அட்லி மீது ஹைதராபாத் போலீஸ் ஸ்டேஷனில் மோசடி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, மகாராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான அகிலேஷ் பாலின் கதையை சினிமாவாக எடுக்க முடிவு செய்து இருந்தேன்.

இதற்காக அவரை சந்தித்து கதைக்காக பல லட்சம் தருவதாக ஒப்பந்தம் போட்டு இருந்தேன். மேலும், கடந்த ஆண்டு இதற்கான முன் பணமாக 5.5 லட்சத்தையும் கொடுத்து இருந்தேன்.

ஆனால் சமீபத்தில் வெளியான பிகில் படத்தின் டிரைலரை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அகிலேஷ் பாலின் கதையை போலவே இருந்தது இதனால் உடனடியாக அட்லீயை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தேன் ஆனால் பலன் ஏதும் இல்லை.

மேலும், என்னிடம் உள்ள ஒப்பந்தத்தையும் அவருக்கு அனுப்பி வைத்தேன், அதற்கும் பதில் அளிக்கவில்லை. அகிலேஷையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் தனது கதையை திருடி படமாக்கிய குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இயக்குனர் நந்தி குமாரின் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், இயக்குனர் அட்லீயின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

story stole case on atlee


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->