"பெற்றோர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள்" ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் அட்வைஸ்! - Seithipunal
Seithipunal


ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்தத் திரைப்படத்தின் மூலம் பைவ் ஸ்டார் கணேசன் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுடன், பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள கே ஜி காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள அனு பல்லவி  திரையரங்கில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் இருக்கைகளை திறந்து வைத்த பின்   செய்தியாளர்களை சந்தித்து பேசினார்  ராகவா லாரன்ஸ். அப்போது  செல்போனிற்க்கு கொடுக்கப்படும் மரியாதை கூட பெற்றோர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதுதான் இந்த திரைப்படத்தின் கதை என குறிப்பிட்டார். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது எனக்கூறிய அவர் மக்கள் அதிகமாக வரத் தொடங்கியது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார். மேலும் நமது பெற்றோருடன் அதிகமான நேரங்களை செலவிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ராகவா லாரன்ஸ்  ஒரே மாதிரியான கதைகளில் நடித்துக் கொண்டிருந்தால் நமக்கே போர் அடித்து விடும்  அதனால் தான் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக கூறினார். ருத்ரன் பாதை திரைப்படத்தை தொடர்ந்து  சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா 2 ஆகிய திரைப்படங்களில்  நடித்து வருகிறேன். சந்திரமுகி 2 திரைப்படத்தில் இயக்குனர் பி வாசுவை நம்பி என்னை முழுமையாக ஒப்படைத்து விட்டேன் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spend more time with parents Raghava Lawrence Advice to Fans


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->