அஜித்துக்காக ரிஸ்க் எடுத்து பாடிய எஸ்.பி.பி! அதுவே எஸ்பிபி-க்கு அவருக்கு ‘சிக்கலாக’ மாறியது! என்ன நடந்தது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் இசை வரலாற்றில் தனக்கென அழியாத முத்திரை பதித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அவர், பல நடிகர்களின் திரைப்பயணத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். அந்த வகையில் நடிகர் அஜித்தின் ஆரம்பகால சினிமா பயணத்திலும் எஸ்.பி.பி-யின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

அஜித்தின் பள்ளித் தோழராக இருந்தவர் எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.பி. சரண். அந்த நட்பின் மூலமாகவே தெலுங்கில் உருவான ‘பிரேம புஸ்தகம்’ திரைப்படத்தில் நடிக்க அஜித்தை எஸ்.பி.பி பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் தமிழில் ‘அமராவதி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அஜித், இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.

அஜித்தின் ஆரம்பகால படங்களில் பல பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார். ‘அன்னமே அன்னமே’ போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. மேலும், ‘உல்லாசம்’ திரைப்படத்தில் அஜித்தின் தந்தையாகவும் அவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில், ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” பாடலின் பின்னணி தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகிறது. இயக்குநர் சரண் மற்றும் இசையமைப்பாளர் பரத்வாஜ், ‘கேளடி கண்மணி’ படத்தில் இடம்பெற்ற “மண்ணில் இந்த காதலன்றி” பாடலைப் போலவே, குரல் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் பாடலையும் வடிவமைக்க விரும்பியதாக கூறப்படுகிறது.

அதன்படி, பாடலை மிகவும் உயர்ந்த ஸ்ருதியில் பாட வேண்டிய சவாலை எஸ்.பி.பி ஏற்றுக்கொண்டார். தனது அனுபவமும் திறமையும் கொண்டு பாடலை சிறப்பாக பதிவு செய்தார். பாடலின் கடினமான பகுதிகளில் தேவையான இடங்களில் சுவாச இடைவெளிகளையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தப் பாடலுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால், “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” மற்றும் “மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு” ஆகிய பாடல்களின் வரிகள் முதலில் திரைப்படத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. கவிஞர் வைரமுத்துவின் கவிதைத் தொகுப்புகளில் இடம்பெற்ற வரிகளை தேர்வு செய்து, பின்னர் இசையமைத்து பாடல்களாக மாற்றியிருந்தனர்.

பாடல் பதிவு முடிந்தபின், இசையமைப்பாளர் பரத்வாஜிடம் எஸ்.பி.பி நகைச்சுவையாக ஒரு கருத்தை கூறியதாக சொல்லப்படுகிறது. “இந்தப் பாடல் கண்டிப்பாக ஹிட் ஆகும். ஆனால் அதற்குப் பிறகு நான் செல்லும் எல்லா மேடை நிகழ்ச்சிகளிலும் ரசிகர்கள் இந்தப் பாடலை ஒன்ஸ்மோர் கேட்பார்கள். அப்போது என்ன செய்வது?” என்று அவர் சிரித்தபடி கூறியிருந்தாராம்.

அவர் கணித்தது போலவே ‘அமர்க்களம்’ திரைப்படம் வெற்றி பெற்றதுடன், “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” பாடலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தது. பின்னர் எஸ்.பி.பி பங்கேற்ற பல இசை நிகழ்ச்சிகளிலும் ரசிகர்கள் தவறாமல் இந்தப் பாடலைக் கோரியதாக கூறப்படுகிறது.

இன்றும் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல், இசை ரசிகர்களும் அதிகம் விரும்பும் பாடல்களில் ஒன்றாக “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” திகழ்கிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் அற்புதமான குரல் திறனை வெளிப்படுத்திய இந்தப் பாடல், அவரது இசைப் பயணத்தின் மறக்க முடியாத மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SPB took a risk by singing for Ajith and that very act turned into a problem for him Do you know what happened


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->