அடேங்கப்பா.. இப்ப சூரிக்கு அடிக்குது ஜாக்பாட்.! புதிய படத்தில்.. அவருடன் கைகோர்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக தன்னை  முன்னிறுத்தி இருப்பவர் சூரி. இவர் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய நண்பரும் முன்னணி நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயனின் தயாரிப்பில்  மீண்டும் கதாநாயகனாக நடிக்கயிருக்கிறார் சூரி. இந்த அறிவிப்பினை சிவகார்த்திகேயனே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின்எஸ்கே ப்ரோடக்க்ஷன் சார்பாக தயாரிக்கப்படும்   கொட்டு காளி என்ற திரைப்படத்தில் தான் சூரி மீண்டும் நடிக்கிறார். சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றிருக்கும் திரைப்படம் கூழாங்கல். அந்தத் திரைப்படத்தின் இயக்குனரான வினோத் ராஜ் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் மலையாள நடிகை அனன்யா பென் முக்கிய வேடத்தில் நடிக்கயிருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக சக்தியும் பட தொகுப்பாளராக கணேஷும் பணியாற்ற உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soori next team with sk production as hero koolangal  director vinoth raj to direct this fim


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->