மீண்டும் ரியாலிட்டி ஷோவுக்கு வந்த சினேகா.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா.அதனைத் தொடர்ந்து அப்பாஸ்க்கு ஜோடியாக ஆனந்தம் படத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து, புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பாராத்திபன் கனவு, வசீகரா, ஆட்டோ கிராஃப் உள்ளிட்ட சுமார் 70 திரைப்படங்களில் நடித்து விருதுகளையும் பெற்றுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு சினேகா முதன்முறையாக நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம், காதலர்களாக மாறிய இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். மேலும், ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக தலைகாட்டி வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்ற உள்ளார்.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றி உள்ளார். மேலும், இவருடன் சரவணன் மீனாட்சி செந்தில் மற்றும் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா ஆகிய இருவரும் நடுவர்களாக பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sneha in junior super stars show


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->