சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் தான் மாவீரன். இதனை யோகி பாபுவை வைத்து மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இயக்கி வருகிறார். 

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயினாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தில், இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றது. சமீபத்தில் மாவீரன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan in maveeran movie possible to release on July


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->