அதிதி சங்கரை வச்சு பக்காவா ஸ்கெட்ச் போட்ட சிவகார்த்திகேயன்? கை கொடுக்குமா.?! - Seithipunal
Seithipunal


இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  அதிதி சங்கர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் டாக்டர் மற்றும் டான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். இதில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். 

மண்டேலா பட இயக்குனராக மடோன் அஸ்வின் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மாவீரன் படத்தில் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இதில் யோகி பாபு மற்றும் சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற உள்ளன.

இதில் அதிதிசங்கர் ஒரு திறமையான, தைரியமான பத்திரிக்கையாளராக நடிக்க இருப்பதாகவும் கிராமத்து பெண்ணாக முதல் படத்தில் நடித்தவரை முற்றிலும் வேறு கோணத்தில் மாவீரன் படத்தில் பார்க்கலாம் என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் அதிதி சங்கரை சிவகார்த்திகேயன் நடிக்க வைத்ததற்கு ஒரு உள் காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது 25-வது திரைப்படத்தில் ஒரு மாஸ் இயக்குனரை கொண்டு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம். எனவே, தான் சங்கருக்கு கொக்கி போடும் விதமாக அதிதி சங்கரை தனது படத்தில் சிவகார்த்திகேயன் இணைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan Evil plan About adithi shankar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->