மீண்டும் இணைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் கூட்டணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனும் சத்யராஜுடன் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் படநிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan 20 movie pooja photos


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->