வாலி பட பாடலுக்கு சிம்ரனின் அசத்தல் நடனம்.! அஜித் இல்லாதது தான் குறை.! - Seithipunal
Seithipunal


21 ஆண்டுகளுக்கு முன்பு வாலி படத்தில் அஜித்துடன் ஆடிய நடனத்தை நடிகை சிம்ரன் தற்போது மீண்டும் ஆடியிருக்கிறார். 

டிக் டாக் நிறுவனம் திரைப்பிரபலங்கள் பலரையும் தங்களுடைய நிறுவனத்தை பயன்படுத்துமாறு கூறியதில் நடிகை சன்னிலியோன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தற்போது டிக்டாக்கில் ஆக்டிவாக மாறியிருக்கின்றனர். 

இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தில் ஏப்ரல் மாதத்தில் பாடலுக்கு மிகவும் ஸ்டைலாக நடிகை சிம்ரன் நடனம் ஆடி இருப்பார். 

இந்த பாடலுக்கு மீண்டும் அவர் டிக்டாக்கில் நடனமாடி இருந்த வீடியோவை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த நடனத்தை கண்ட அவரது ரசிகர்கள் "பலரும் வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அஜித் ரசிகர்கள் பலரும் நீங்கள் அப்படியே இருக்கிறீர்கள். இந்த பாடலுக்கு நடனமாடும் போது அஜித் மட்டும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simran dance in tiktok


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->