மீண்டும் பாடிய சிம்பு.. பயங்கர வைரலாகும் 'don't worry pullingo' பாடல்..!! குவியும் பாராட்டுக்கள்!! - Seithipunal
Seithipunal


மிழ் சினிமா பொறுத்தமட்டில் நடிகர்கள், நடிப்பில் மட்டுமில்லாமல் பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் சிறந்து வருகிறார்கள். அந்தவகையில் விஜய், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பிலும் சிறந்து படங்களில் பாடியும், அவ்வளவு ஏன்? சினிமாவில் அனைத்து துறைகளும் அசத்தி வருகிறார்கள் என்றே கூறலாம்.

அந்தவகையில் மாஸ்டர் படத்தில் 'ஒரு குட்டி கதை' பாடல் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. இதனை தொடர்ந்து விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய சிம்பு 'இரும்பு மனிதன்' படத்தில் 'don't worry pullingo" என்ற பாடலை பாடி தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் டிஸ்னியின் 'இரும்பு மனிதன்' படத்தில் பாடலாசிரியராக நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார். இப்படத்தில் இசையமைப்பாளர் கே.எஸ். மனோஜ் இருக்கிறார். சங்கர் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் வரும் பாடல்கள் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் சிம்பு பாடி தற்போது வெளிவந்துள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து நடிகர் சிம்பு கூறியபோது:  "ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பாடல் நான் பாடிய போது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது" என்று சிம்பு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu sing dont worry pullingo song


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->