சிம்பு பிறந்தநாளில் டபுள் கொண்டாட்டம்..! தயாரிப்பு நிறுவனத்தில் சஸ்பென்ஸ் அறிவிப்பு.?! - Seithipunal
Seithipunal


நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, கருணாகரன், எஸ் ஏ சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் நடித்திருப்பார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு கொடுத்த வெற்றிப்படம் மாநாடு. இந்த திரைப்படத்திற்கு பின்னர் கம்பேக் கொடுத்த சிம்புவை வைத்து நிறைய இயக்குனர்கள் படம் இயக்க ஆசைப்படுகின்றனர். நடிகர் சிம்பு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு வெந்து தணிந்தது காடு சிங்கிள் பாடல் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் 10 தல படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.

சிம்புவின் கெட்டப்பில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சஸ்பென்ஸாக பதிவிட்டுள்ளது. எனவே சிம்பு ரசிகர்கள் மிகவும் குஷியில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Simbu Birthday update 2022


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->