ஒரு கச்சேரிக்கு இவ்வளவு சம்பளமா? செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடியினர் போட்டுடைத்த ரகசியம்!! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர். இவர்கள் தனித்தனியே போட்டிகளில் கலந்துகொண்டு நாட்டுப்புறப் பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தனர்.

மேலும் இவர்கள் இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த போட்டியில் செந்தில் கணேஷ்  வெற்றி பெற்று சூப்பர் சிங்கர் என்ற பட்டத்தை வென்றார். இதனை தொடர்ந்து ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் இருவருக்கும் ஏராளமான சினிமா பாடல் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இவ்வாறு பிஸியாக இருக்கும் இவர்கள் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மேலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்கின்றனர். 

மேலும் இவர்கள் இசைக்கச்சேரிகளிலும் பாடி வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சிகளுக்கு செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடியினர் அதிகமாக பணம் வாங்குவதாக செய்திகள் பரவியது.


இதனை தொடர்ந்து செந்தில்கணேஷ்- ராஜலக்ஷ்மி ஜோடிசமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர். அதில் அவர்கள் நாங்கள் ஒரு கச்சேரிக்கு 1 லட்சம் வாங்குகிறோம். ஆனால் அது எங்களுக்கு மட்டும் இல்லை, எங்களுடன் பாடும் கலைஞர்கள், இசைக்கருவி வாசிப்பவர்கள் என எங்கள் குழுவை சேர்ந்த அனைவருக்கும் சேர்த்துதான் என கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthil ganesh rajalakshmi salary for music function


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal