"அடி தூள்"... 19 வருடங்களுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனிக்கு தயாராகிறார் செல்வராகவன்.! புதிய அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா என்று எடுத்தால் செவன் ஜி ரெயின்போ காலனி திரைப்படத்திற்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு. 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம்  மிகப்பெரிய வெற்றியை பெற்றது. செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்த இந்த திரைப்படம் காதல் படங்களில் ஒரு கிளாசிக் திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். நா முத்துக்குமாரின் பாடல் வரிகளில் உருவான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆக வெற்றியடைந்தன. படத்தின் பின்னணி செய்யும் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. இந்தத் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளாகியும் இந்தப் படத்திற்கான கிரேஸ் ரசிகர்களிடம் இன்னும் குறையவில்லை.

இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தத் திரைப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் மூலமாக செல்வராகவன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ரவி கிருஷ்ணாவும் திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்து வருகிறாராம். ஜூன் மாதம் படப்பிடிப்புகள் தொடங்கி  இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்புகள் முடிவடையும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7ஜி ரெயின்போ காலனி படத்தை தயாரித்த ஏ. எம் ரத்தினம் இத்திரைப்படத்தையும் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selvaraghavan is getting ready for 7g Rainbow Colony New Update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->