தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து .. முன்னதாகவே தெரிவித்த செல்வராகவன் வைரலாகும் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான  தனுஷ் ஆரம்பகாலம் முதலே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதிலும் பெண்கள் விஷயம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா அமெரிக்காவிற்கு சென்று அடிக்கடி ஷாப்பிங் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அந்த நாட்களிலெல்லாம் தனுஷ் நடிகைகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டு இருப்பாராம். அதுபோல பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி ஒருவர் தனுஷ் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் கிசுகிசுக்கள் அவ்வப்போது வருவதுண்டு.

இவற்றின் உண்மை தன்மை குறித்து அவருக்கு மட்டுமே தெரியும். நிறைய திரைப்படங்களில் சமீபகாலமாக வெற்றி நடை போட்டு வரும் தனுஷ் தனது திருமண வாழ்வை ஐஸ்வர்யாவுடன் முடித்துக் கொள்வதாக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவின் விவாகரத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் ஒரு மாதத்திற்கு முன்பாக என்று, "தயவுசெய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டுவிட்டு நன்கு உணவருந்திவிட்டு ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று அந்தப் பிரச்னையே இருக்காது. இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்" என்று பதிவிட்டிருந்தார். தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து முன்னதாகவே செல்வராகவன் இப்படி பதிவிட்டு இருந்தார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selvaragavan about Dhanush aishwarya divorce


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->