1994-ல் ரூ.200 கோடி வசூல்! முதல் இந்திய படம்! படத்தோட கதையை கேட்டா மிரண்டு போயிடுவீங்க! - Seithipunal
Seithipunal


அண்மை காலமாக 500 கோடி, 1000 கோடி வசூலை குறிவைத்து பான் இந்தியா திரைப்படங்கள் வெளியாவது வாடிக்கையாகியுள்ளது.

இப்படி வசூலில் மிகப்பெரும் வெற்றி பெரும் படங்களில் பெரும்பாலானவை பெரிய ஹீரோ, மிரட்டும் வில்லன், அதிர வைக்கும் இசை, பிரமாண்ட சண்டை காட்சி என ஆக்ஷன், திரில்லர் ரக கதையாகவே உள்ளது.

இதைத்தான் ரசிகர்கள் விரும்புவதாக வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்திய சினிமாவில் முதன்முதலில் 200 கோடி வசூலை ஈட்டிய திரைப்படத்தின் பின்னணியை கேட்டால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

எந்தவித பிரமாண்டமும் இல்லாமல் ரூ.200 கோடி வசூல் செய்த திரைப்படம் "ஹம் ஆப்கே ஹை கோன்" (Hum Aapke Hain Koun).

ஒரு மென்மையான குடும்ப கதையை களமாக கொண்டு 1994ல் வெளியான இந்த படத்தை எழுதி, இயக்கியவர் சூரஜ் பர்ஜாத்யா. 

மும்பை லிபர்டி திரையரங்கில் மட்டும் 100 வாரங்களுக்கும் மேலாக ஓடிய இந்த படத்தை குடும்பம் குடும்பமாக பார்க்க சென்ற மக்களின் அமோக வரவேற்பு நாடு முழுவதும் பேசப்பட்டது,

படத்தின் நாயகன் சல்மான் கான். அப்போது அவர் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். கதாநாயகியாக மாதுரி தீட்சித் நடித்திருந்தார்.

படத்தின் கதை நாயகனும், அவரது அண்ணியின் தங்கையான நிஷாவும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். அவர்கள் காதல் கைகூடியதா? என்ற ஒரு வரி கதைதான்.

14 இனிமையான பாடல்கள் தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இசையமைப்பாளர் ராம்லட்சுமண் இசையில் பெரும்பாலான பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடியுள்ளனர்.

ஒரு சண்டை காட்சி கூட இல்லாத இந்த திரைப்படத்தில், நேர்த்தியான கதையமைப்பும், பாடல்களும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இதில் இன்னும் ஓரு சுவாரசியம் என்னவென்றால், "ஹம் ஆப்கே ஹை கோன்" படத்தின் நாயகனாக நடிக்க முதலில் அமீர் கானிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், அவர் நடிக்க மறுக்கவே அந்த வாய்ப்பு சல்மான் கானுக்கு கிடைத்தது.

"ஹம் ஆப்கே ஹை கோன்" படத்தின் இந்த 200 கோடி வசூல் சாதனையை, சுமார் 15 வருடங்கள் கடந்து அமீர் கான் நடிப்பில் வெளியான "த்ரீ இடியட்ஸ்" ரூ.300 கோடி வசூல் செய்து முறியடித்தது. 

"ஹம் ஆப்கே ஹை கோன்" தமிழில் "நான் உங்களுக்கு யாராம்" எனும் தலைப்பில், சுமார் ரூ.6 கோடி செலவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salman Madhuri Dixit Hum Aapke Hain Koun Rs200 crore club


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->