சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் முக்கிய அப்டேட்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் தான் மாவீரன். இதனை யோகி பாபுவை வைத்து மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இயக்கி வருகிறார். 

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தில், இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் மாவீரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் காரணமாக சிவகார்த்திகேயனின் மாவீரன்   ஒத்திவைக்கப்பட்டது.

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Red Giant movies release SK in maveeran movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->