"ஆதிபுருஷ் படத்திற்க்கு, பத்தாயிரம் இலவச டிக்கெட்டுகள்; பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்! - Seithipunal
Seithipunal


பாகுபலி படபுகழ், நடிகர் பிரபாஸ் நடித்து இந்த மாதம் வெளியாக இருக்கும் படம் ஆதிபுருஷ். இந்த படத்தை ஓம்ராவத் இயக்கி உள்ளார். கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடித்துள்ள, இந்தப் படத்தில் சைப் அலி கான், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இராமாயண கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 3டி தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியாகிறது. வருகிற ஜூன் 16ஆம் தேதி வெளியாக இருக்கிற இந்த படத்தை டி சிரியஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ப்ரி ப்ரோமோஷன் நிகழ்வுகள் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது.சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேர பெற்றது. 

இரண்டு நாட்களுக்கு முன்னதாக, நடிகர் இராகவா லாரன்ஸ் ,இராமாயண படத்தில் பிரபாஸ் நடிப்பதை குறித்து, தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ,என அவருடைய ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கான் இந்த படத்தை ஆதரவற்ற குழந்தைகள் அனைவரும் இலவசமாக பார்ப்பதற்காக சுமார் 10,000 டிக்கெட்டுகளை ப்ரீ புக்கிங் செய்து இருப்பதாக கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, தெலுங்கு தயாரிப்பாளர் அபிஷேக், அம்மாநில அரசு பள்ளி மாணவ, மாணவிகள், மற்றும் ஆதரவற்ற குழந்தைகள், படத்தை இலவசமாக பார்ப்பதற்கு ,பத்தாயிரம் டிக்கெட்டுகளை, முன் பதிவு செய்து தருவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் இலவச டிக்கெட்டுகள் குறித்தான செய்திகள் , இல்லாதவர்களின் ஈர்ப்பை கவரும் வகையில் அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்து வலுத்து வரும் ஆதரவுகளால் , ஆதிபுருஷ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே, அதிகமாகி கொண்டு இருக்கிறது. படம் வரும் ஜூன் மாதம் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranbeer Announced Ten Thousand Free Tickets for the movie Aadhi Purush


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->