அந்த காலத்திலேயே படமெடுத்தேன்.. ஆன்லைன் ரம்மிக்காக ராஜ்கிரண் போட்ட பதிவு.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் பிரபல இயக்குனரும் நடிகருமாக இருப்பவர் ராஜ்கிரன். இவர் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஒரு பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், "சீட்டாட்டம் என்பது மிக மோசமான சூது. இந்த சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. 

சீட்டாட்டம் ஆடும்போது வெறி போதை உள்ளிட்டவை ஏற்படும். அந்த மயக்கத்தைவிட்டு திரும்பவே மனது வராது. இதற்காக பணம் தேவைப்படும் போது எந்தவிதமான அடிமட்ட சூழலுக்கும் சென்று பணத்தை சம்பாதிக்க அவர்கள் முடிவு எடுப்பார்கள். அதற்கு அடிமையானவர்கள் மோசமான எண்ணங்களால் நிறைந்து இருப்பார்கள். 

இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் நான் அந்த காலத்தில் எல்லாமே என் ராசாதான் என்ற படத்தை எடுத்தேன். அப்பொழுது சீட்டு ஆடுவது சட்டப்படி குற்றமாக இருந்தது. காவல்துறை கைது செய்தால் அசிங்கமாகி விடும் என்ற பயத்தில் பலரும் இதை ஆடுவதை நிறுத்தி விட்டனர். ஆனால் தற்போது ஆன்லைன் ரம்மியினால் பல குடும்பங்கள் தெருவுக்கு வந்து விட்டது. 

அரசு இதை தடுக்க முடிவெடுத்திருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. இதற்கு தமிழ் நடிகர்களும் ஒத்துழைக்க வேண்டும். இது போன்ற விளம்பரங்களில் அவர்கள் நடிக்காமல் இருக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் இதுவரை விளம்பரங்களில் நடிக்காமல் இருக்கும் ஒரு முக்கிய பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajkiran about online rummy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->