சூரியின் விடுதலை படத்தில் இணைந்த மற்றுமொரு இயக்குனர்..?!  - Seithipunal
Seithipunal


தனது அனைத்து படங்களிலும் வெற்றிபெற்ற இயக்குநர் என்ற பெருமைக்குரியவர் இயக்குனர் வெற்றிமாறன். பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகின்றார். இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் லீட் ரோலில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில், விடுதலை திரைப்படத்தில் மூத்த இயக்குனரான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. விடுதலை திரைப்படம் 2 பாகங்களாக உருவாகும் என்று முன்னதாக செய்திகள் வெளியாகியது.

முதல் பாகத்தின் ஷூட்டிங் முழுவதாக முடிந்துவிட்டதாகவும், தொடர்ந்து, அடுத்த பாகத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் ஒரு பெரிய சண்டைக் காட்சி 2-வது பாகத்தில் நிலுவையில் இருக்கின்றது.

இதை ஸ்டண்ட் இயக்குநரா பீட்டர் ஹெய்ன் இயக்கவுள்ளார். விடுதலை திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி வரிசையில் கவுதம் மேனன் நடித்துள்ளார். இதனை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajiv menon in Viduthalai movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->