ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படம் எப்போது ரிலீஸ்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . தற்போது இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக பட குழு காத்திருப்பதாகவும் செய்திகள் நிலவி வருகின்றன.

இந்தத் திரைப்படம் முதலில் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருந்ததால் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பருக்கு மாற்றப்பட்டது. 

சூப்பர் ஸ்டாருடன் தமன்னா மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கன்னடத்தின் பிரபலமான நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தத் திரைப்படத்தினை பற்றி அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகியது. அதன்படி பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஜெயிலர் திரைப்படத்தைப் பற்றிய புதிய அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தது. ஆனால் எதைப் பற்றிய அப்டேட் என்று குறிப்பிடவில்லை.

இந்த நிலையில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இதனை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini in jailor movie release on August 10


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->