நன்றி விசுவாசத்தை மறந்த யோகி பாபு..!! இனி ஒரு படத்தில் கூட நடிக்க கூடாது..!! தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் ஆவேசம்..!! - Seithipunal
Seithipunal


நடிகர் யோகி பாபு கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு தாதா திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் அதன் பிறகு டப்பிங் வேலைக்காக நடிகர் யோகி பாபு வராமல் தயாரிப்பாளரை இழுத்து அடித்துள்ளார். இதனால் படம் முழுமை பெறாமல் தள்ளி போனது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தாதா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளரும் இயக்குனருமான கின்னஸ் கிஷோர் "இன்று யோகி பாபுவிடம் நேரடியாக சில விஷயங்களை சொல்கிறேன்.

ட்விட்டரில் போடுவது, ஆளை வைத்து சொல்வது என் நான் செய்ய மாட்டேன் நேரடியாகவே சொல்கிறேன். "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" போன்று இல்லாமல் நன்றி விசுவாசத்தை மறந்தவர் நடிகர் யோகி பாபு.

இந்த படத்தில் அவர் நான்கு அல்லது ஐந்து சீன்களை மட்டும் யோகி பாபு நடித்திருந்தால் திரைப்பட துறையை விட்டு நான் போய் விடுகிறேன். இந்த படத்தில் 40 சீன்களுக்கு மேல் அவர் இருந்தால் திரைப்படத்துறையை விட்டு யோகி பாபு போய்விடுவாரா? வியாபாரிகளுக்கு நேரடியாக போன் செய்து இந்த படத்தை வாங்க வேண்டாம் என யோகி பாபு சொல்கிறார்.

இந்த திரைப்படத்தில் அவர்தான் நடித்துள்ளார். இந்த அளவிற்கு நான் பொறுமையாக இருந்தது இல்லை. வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் இந்த படத்தை பார்த்துவிட்டு ஒரு இயக்குனரும் தயாரிப்பாளரும் சொல்வது சரியா, ஒரு நடிகர் சொல்வதற்கு சரியா என நீங்களே சொல்லுங்கள்.

இந்த படத்தை வாங்க நிறைய பேர் வந்தார்கள். யோகி பாபு போன் செய்து இந்த படத்தில் நான்கு சீனர்களில் மட்டும் தான் நான் வருகிறேன் இந்த படத்தை வாங்காதீர்கள் என சொல்லியுள்ளார்.

இப்பொழுது நான் பேசிய உள்ளேன். இதன் பிறகு எத்தனை தயாரிப்பாளர்கள் எத்தனை இயக்குனர்கள் பேசுவார்கள் என்று விரைவில் நீங்களே பார்ப்பீர்கள். இரண்டு தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தில் நான் ஒரு புகார் அளித்துள்ளேன். யோகி பாபு என்னுடைய வியாபாரத்தை கெடுத்துள்ளார். என்னுடைய தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிப்பதாக முன்பணம் வாங்கிவிட்டு நடித்து தரவில்லை. 

என்னுடைய படத்தின் வியாபாரத்தை கெடுத்ததற்காகவும் முன்பணம் வாங்கிவிட்டு படம் நடிக்காமல் இருப்பதற்காகவும் இனி அவர் எந்த படத்தில் நடிக்கக் கூடாது என திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளேன்" என விழா மேடையில் கின்னஸ் கிஷோர் ஆவேசமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Producer Kishore obsessed yogibabu even act in a film anymore


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal