திடீர் திருப்பம் - நயன்தாரா படத்திற்கு வந்த சிக்கல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்திருக்கிறது.

இந்த நிலையில், தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி. இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து மகாசபா எச்சரிக்கை விடுத்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது ’’பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் அன்னபூரணி படத்தின் கதை அம்சம் இருக்கிறது. இந்த படத்தை இயக்கிய நிலேஷ் கிருஷ்ணா என்பவரையும், படத்தில் நடித்த நயன்தாராவையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த திரைப்படம் திரையிட்டுள்ள திரையேட்டர்களை தமிழகம் முழுவதும் முற்றுகையிடப்படும் என்று பகிரங்கமாக எச்சரிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

problam in nayanthara movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->