தமிழ் கலாச்சாரத்தை எடுத்து கூறுவது மிகவும் பெருமையாக இருந்தது - நடிகர் விக்ரம் பேட்டி..! - Seithipunal
Seithipunal


மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள  பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். 

இப்படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதையொட்டி, இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக சென்னை, பெங்களூரு டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டுப் படக்குழுவினர் இன்று சென்னை திரும்பினர். 

அப்போது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம், "தமிழகத்தை போலவே மற்ற மாநிலங்களில் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அவர்களே படத்தையும், பொன்னியின் செல்வன் நாவலையும் கொண்டாட தொடங்கியுள்ளனர்.

அவர்களுக்கு நமது தமிழ் கலாச்சாரத்தை எடுத்து கூறுவது மிகவும் பெருமையாக இருந்தது. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில், மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் விழாவில், சோழர்களின் வீரம், பண்பாடு, கலாச்சாரம் என தமிழர்களின் பெருமையை விரிவாக விளக்கியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, பலரிடையே பாராட்டுகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ponniyin selvan promotion function actor vikram speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->