பொன்னியின் செல்வன் 1 மீண்டும் ரிலீஸ்.?! படக்குழு போட்ட அசத்தல் திட்டம்.?! - Seithipunal
Seithipunal


இயக்குனர் மணிரத்னம் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 என இரண்டு பாகங்களாக எடுத்தார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார்,  பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய  வரவேற்பை பெற்று வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி படமாக அமைந்தது. 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

இதனை முன்னிட்டு கடந்த வாரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று உள்விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. அப்போது வெளியான இந்த படத்தின் டிரைலர் அனைத்து மொழிகளிலும் இதுவரை 26 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து  சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக ஏப்ரல் 28ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

 

இந்நிலையில் படத்தின் இயக்குனர் மணிரத்தினம் படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக படத்தின் முதல் பாகத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனைப் பற்றிய செய்தி ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார் நடிகர் பார்த்திபன். அந்த ட்விட்டர் செய்தியில்  மணிரத்தினிடம்  பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ஒரு சில திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தையும் வெளியிட்டால் ரசிகர்கள் தொடர்ச்சியாக பார்க்கலாம் என ஒரு கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையை ஏற்று ஒரு சில திரையரங்குகளில் பொன்னியின் செல்வன்11 திரைப்படத்தை ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ரிலீஸ் இருப்பதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டு இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parthiban comes up with a double treat for ponniyin selvan fans


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->