சாதி இருக்குங்க., அந்தர்பல்டி அடித்த அட்டகத்தி ரஞ்சித்.! இது என்னடா புது உருட்டா இருக்கு?!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சாதிகள் இல்லை என்று கமலஹாசன் தெரிவித்திருந்த நிலையில், கமலஹாசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அட்டக்கத்தி பா ரஞ்சித், தமிழ் சினிமாவில் சாதிகள் உள்ளது என்று பேசியுள்ளார்.

கடந்த 14ஆம் தேதி ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நடிகர் கமலஹாசன், தமிழ் சினிமாவில் சாதி, மதம் எதுவும் கிடையாது. யார் என்ன சொன்னாலும் கவலையில்லை.

தமிழ் சினிமாவிற்கு சாதி, மதம் கிடையவே கிடையாது. ஒரு விளக்கை அணைத்தால் ஒரே ஒளி மட்டும்தான் என்று கமலஹாசன் அந்த இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் கமலஹாசனின் இந்த கருத்துக்கு அட்டகத்தி பட இயக்குனர் பா ரஞ்சித் மறுப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சாதி வேற்றுமை உள்ளது என்றும், என்னுடைய நிலைப்பாட்டில் தான் தெளிவாக இருப்பதாகவும், தமிழ் சினிமாவில் சாதி, மதம் உள்ளதை நான் உணர்கிறேன் என்றும் அட்டக்கத்தி பா ரஞ்சித் பதிலளித்துள்ளார்.

முன்னதாக அட்டக்கத்தி பா ரஞ்சித் சாதிகள் இல்லை என்று பிரச்சாரம் செய்துவந்த நிலையில், இப்போது சாதி இருக்கு, அதை நான் உணர்கிறேன் என்று சொல்லி அந்தர்பல்டி அடித்து ஒரு உருட்டு உருட்டியுள்ளார். விட்ட கம்பி கட்டுரை கதையெல்லாம் சொல்லுவார் போல என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PA RANJITH SAY ABOUT CINEMA COMMUNITTY


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->