கொடுமை.. ஓவியா வெளியிட்ட போட்டோவை கண்டு அலறியடித்த ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் படும் கஷ்டங்களுக்கு ஆறுதலாக சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி அமைத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர். மேலும் அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு ரசிகர் பட்டாளமே உருவாகியது.

சில நாட்களுக்கு முன்பு ஓவியா நடிப்பில் வெளியான 90 ml என்ற படம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. மேலும் ஓவியா இந்தப்படத்தில் புகைபிடிப்பது , மது அடிப்பது, கஞ்சா அடிப்பது போன்றும் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார். அதன் பிறகு எந்த பட வாய்ப்பும் ஓவியாவுக்கு வந்ததாக தெரியவில்லை. 

இந்நிலையில், அவரது காலை சுற்றி பாம்பு இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை, உத்துப்பார்த்தால் அது பாம்பு டாட்டூ என்பது நமக்கு தெரிகிறது. முதலில் இது பாம்புதானே அதிர்ச்சி ஆனவர்கள் இது டாட்டூ என்பதை அறிந்து ரிலாக்ஸ் ஆகி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oviya helen tatto


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->