அடடே... சென்சார் செய்த காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகும் விடுதலை படம்.! புதிய அப்டேட்.! - Seithipunal
Seithipunal


வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் விடுதலை. கடந்த மாதம் 31ம் தேதி இந்த திரைப்படம் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ள விடுதலை திரைப்படத்தை பல்வேறு தலைவர்களும்  பாராட்டி வருகின்றனர்.

 ஜெயமோகன் எழுதிய  துணைவன் என்ற சிறுகதையை  தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம்  அதிகார வர்க்கத்திற்கும்  அதனை எதிர்த்துப் போராடும் போராளிகளுக்கும் இடையேயான  போராட்டத்தை காட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்தத் திரைப்படம் ஓடிட்டியில் வெளியாகும்  தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் 'ஜி5' ஓடிடி தளத்தில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட இருபது நிமிட காட்சிகளும் இணைக்கப்பட்டு ஓ.டி. டி தளத்தில் வெளியாக இருப்பதால்  ரசிகர்கள்  மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New update on Vetrimaran film viduthalai release date with additional footage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->