நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில் புரோகிதருக்கு இத்தனை லட்சம் சம்பளமா.?! - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படம் ஆரம்பத்திலிருந்து காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்பது சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. 

பல ஆண்டுகளாகவே இப்பொழுது, அப்பொழுது என்று தெரிவித்து வந்த நிலையில், இந்த ஆண்டு அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு ஓட்டலில் திருமணம் நடைபெற்றது. 

மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் வெறும் 200 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதிக்கு சென்று தரிசித்து வந்தனர். பின்னர் சொந்த ஊருக்கு சென்று பெற்றோர்களிடம் ஆசி பெற்று வந்தனர். 

இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்ட புரோகிதரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் மூன்று புரோகிதர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் சம்பளம் கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara marriage progidhar salary 


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal