நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் ட்ரெயிலர் குறித்த அப்டேட்.!  - Seithipunal
Seithipunal


மிகப்பெரிய இடைவெளிக்குப் பின்னர், வடிவேலு ஹீரோவாக நடிக்கின்ற திரைப்படம் தான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த திரைப்படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து நடிகை ரெடின் கிங்ஸ்லி, ஷிவாணி நாராயணன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கின்றனர்.

லைகா தயாரிப்பில் உருவாகின்ற இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி வருகின்றார். திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். ஏற்கெனவே, இந்த திரைப்படத்திலிருந்து வெளியாகிய போஸ்டர்கள் அவர்களது ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது. 

இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது, நடந்து வருகின்றது. சமீபத்தில் வடிவேலு குரலில் ‘அப்பத்தா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் படி வரும் டிசம்பர் 9 ஆம் தேதி இந்த படத்தை வெளியிட லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெயிலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naay Sekar Returns trailer Date


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->