தமிழகத்தில் நிரந்தரமாக 1000 தியேட்டர்கள்! தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!  - Seithipunal
Seithipunal


இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளியில் மஞ்சா வர்மக்கலை பயிற்சி பள்ளி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 17ஆம் ஆண்டு விழா மற்றும் வர்ம பிராத்திகாரா சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டார். 

விழாவிற்கு பின்னர் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆன்லைன் திரைப்பட டிக்கெட் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும் ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 50 பைசா என்று இருந்த பராமரிப்புச் செலவை 4 ரூபாயாக அரசு உயர்த்தி கொடுத்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் தமிழகத்தில் நிரந்தரமாக 1000 தியேட்டர்கள் செயல்பட அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 800 தியேட்டர்கள் வரை மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க முடியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minimum 1000 theaters in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->